பிரிட்டனில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெயிர் ஸ்டார்மர், நாட்டை மறுசீரமைப்போம் என சூளுரைத்துள்ளார்.
தேர்தலில் தொழிலாளர் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்ற நிலையில், லண்டனில் அமைச்சர்கள் வசிக்கும் டவுனிங் தெருவில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மாற்றத்துக்கான வேலை உடனடியாக தொடங்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று கெயிர் ஸ்டார்மர் தெரிவித்தார்.