டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதுகின்றன.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. வெஸ்ட்இண்டீசில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கலந்து கொள்ளும் முதல் ஆட்டம் இதுவாகும், மாலை 4.30க்கு தொடங்கும் இந்தப் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.