திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி தன்னை விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பழனியை சேர்ந்த காதர் ரியாஜ் -நஸ்ரின் பாத்திமா தம்பதியினருக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
காதர் ரியாஜ் வரதட்சனை கேட்டு அவரது மனைவியை மிரட்டியதாகவும், முத்தாலக் சட்ட முறைப்படி தன்னை விவாகரத்து செய்து ஆயிரத்து 500 ரூபாய் பணம் அனுப்பியதாகவும் தெரிகிறது.
இது குறித்து நஸ்ரின் காவல்நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் வரதட்சனை கேட்டு மிரட்டியதற்காகவும், நடைமுறையில் இல்லாத முத்தாலக் சட்டத்தை பயன்படுத்தி தன்னை விவாகரத்து செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நஸ்ரின் பாத்திமா கோரிக்கை வைத்துள்ளார்.