பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்ஸ்ட்ராக் படுகொலையை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தால், சிதம்பரம் செல்லக்கூடிய பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்ய முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் முன்பு, அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.