நீலகிரி மாவட்டம் உதகையில் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
உதகையில், வருவாய் துறையினருக்குச் சொந்தமான, 52 ஏக்கர் நிலத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப், குத்தகை அடிப்படையில் குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது.
அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் 822 கோடி ரூபாய் குத்தகை தொகையை, மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலுவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானத்தின் அனைத்து கட்டடங்களுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.