திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருண்- துர்கா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை கிருத்திகா, வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சிறுகிருத்திகாவின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.