தென்காசி மாவட்டம் சுரண்டையில் இளைஞரை கடைக்குள் புகுந்து காங்கிரஸ் நிர்வாகி தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆணைக்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஸ்வரன், செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு வெளியே இருந்த கால்மிதியை சதீஸ்வரன் தூசி தட்டியபோது அருகிலுள்ள கடையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் நிர்வாகி தேவேந்திரன் மீது பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் வந்த தேவேந்திரன், சதீஸ்வரனை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பாக சதீஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.