வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக கன்னியாகுமரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டின் ஜேடன் என்ற 7-ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த இந்த கருவியில் துப்பாக்கி ஒலி மற்றும் நெருப்பு போன்ற வெளிச்சம் செயற்கை முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவனின் இந்த முயற்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.