ஈரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மசூத் பெசெஷ்கியானுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
“ஈரான் அதிபராக மசூத் பெசெஷ்கியான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். நமது மக்கள் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் நலனுக்காக நமது நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதையும் உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதையும் எதிர்நோக்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.