கரூரில் இரட்டை சாதா புறா போட்டி தொடங்கியது. பசுபதிபாளையம் அடுத்துள்ள ராமானூரில் அமராவதி ஆற்றங்கரையில் புறா போட்டி துவங்கியது.
போட்டியில் பத்துக்கு மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இந்த சாதா புறா போட்டி வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. சாதா புறா கண்கள் மஞ்சள் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 3 -ஆம் தேதி கர்ணப் புறா போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.