கிரிக்கெட்டில் பிசிசிஐ செயலர் ஜெய்ஷா ஆற்றிய பணி மகத்தானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆங்கில சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஐபிஎல் போட்டியை போல பெண்களுக்கான பிரீமியர் லீக்கை தொடங்கி, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஊதியம் மற்றும் சலுகைகளைப் பெற்றுத் தந்தவர் ஜெய்ஷா என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது தந்தையின் அரசியல் பின்புலத்தைப் பார்த்து சிலர் ஜெய்ஷாவை பாராட்ட மறுப்பதாகவும் சுனில் கவாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்.