தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும்!- அண்ணாமலை வலியுறுத்தல்
Aug 14, 2025, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும்!- அண்ணாமலை வலியுறுத்தல்

Web Desk by Web Desk
Jul 6, 2024, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு தனது தொடர் விவசாயிகள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகள் நலனுக்காக, சொந்த நிலங்களில் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, வருடம் ஆறாயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் விவசாயிகள் கௌரவ நிதி (PM Kisan) திட்டத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கிலும், 17 தவணைகளாக, ரூ.34,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, தமிழக விவசாயிகளுக்கு ரூ. 10,435 கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 2015 – 16 ஆம் ஆண்டு விவசாயக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 79.38 லட்சம் விவசாயிகள் உள்ளதாகவும், இவர்களில், சுமார் 39 லட்சம் விவசாயிகள், இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெறத் தகுதியுடையவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் உண்மையான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்காமல், சுமார் 7 லட்சம் போலியான நபர்களை இந்தத் திட்டத்தில் இணைத்து, பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி கடந்த 2020 – 2021 ஆண்டுகளில் கண்டறியப்பட்டு, அவர்களின் பெயர்கள் இந்தத் திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. ஆனால், தகுதியுடைய உண்மையான விவசாயிகளை இணைக்கும் பணி நடைபெறவில்லை.

கடந்த 2020 – 2021 ஆண்டுகளில் சுமார் 44 லட்சம் பேர் பலனடைந்த இந்தத் திட்டத்தில், பயனாளிகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, தற்போது 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகிறார்கள். சுமார் 23 லட்சம் பயனாளிகள், திமுக அரசால் விவசாயிகள் உதவித் தொகை பெறுவதிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

23 லட்சம் பேரும் விவசாயிகள் இல்லையென்றால், இந்த மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கை என்ன? சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

இதில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க, 2015 – 16 ஆம் ஆண்டு விவசாயிகள் கணக்கெடுப்பின்படி, சுமார் 39 லட்சம் விவசாயிகள், மத்திய அரசின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் பயனடையத் தகுதியுடையவர்கள்.

ஆனால், வெறும் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே தற்போது பயனடைகிறார்கள் என்றால், தமிழகத்தில் இருந்து, தகுதியான விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைக்க, திமுக அரசு மெத்தனமாக இருக்கிறது என்றுதான் பொருள். விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்திற்கென மத்திய அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில், உரிய விபரங்களை தமிழக வேளாண்துறையினர் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழக வேளாண்துறையினர் மெத்தனமாக உள்ளதால், பல லட்சம் தகுதியுள்ள விவசாயிகள், மத்திய அரசின் விவசாய உதவித் தொகையைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட 23 லட்சம் பேரும் உண்மையில் விவசாயிகள் இல்லையா அல்லது மத்திய அரசுக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக, திமுக அரசு செய்யும் கீழ்த்தரமான வேலையா என்ற கேள்வி எழுகிறது.

மேலும், இந்த நிதி, விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால், திமுக தனது ஸ்டிக்கர் ஒட்ட வழியில்லாமல், தகுதியுள்ள விவசாயிகளை, விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து இணைக்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

உடனடியாக, தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட்டு, மத்திய அரசு விவசாய கௌரவ நிதி பெறத் தகுதியான அனைத்து விவசாயிகளையும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், திமுக அரசு தனது தொடர் விவசாயிகள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும் தமிழக பாஜக  சார்பாக அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Tamil Nadu Agriculture Department should give up its lax attitude!- Annamalai insists
ShareTweetSendShare
Previous Post

பிசிசிஐ செயலர் ஜெய்ஷாவுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை – ஜெ.பி.நட்டா கண்டனம்!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies