மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென் மாவட்டங்களில் முக்கிய பேருந்து நிலையமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பேருந்துநிலையத்தில் இரவில் தூங்கும் பயணிகளிடமும், நடந்து செல்பவர்களிடமும், தொடர்ச்சியாக செல்போன், பணம் மற்றும் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில் 4 பேரை கைது செய்தனர். மேலும் நால்வரை தேடி வருகின்றனர்.