ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
ராமேஷ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் சென்று ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென சுமார் 100 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதில் நாட்டுப்படகுகள் கரை தட்டி நின்றன.
இது காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்ததாகவும், யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் மத்திய கடல்வளம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.