இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை ஜூன் மாதத்தில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்டொமொபைல் முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை 35 புள்ளி 65 சதவிகிதம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் மணீஷ் ராஜ் கூறுகையில், நிலையான போக்குவரத்தை நோக்கி காலம் மாறி வருவதாகவும், பருவமழை காலத்தில் விற்பனை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.