இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தனது 43வது பிறந்தநாளை மனைவி சாக்ஷியுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.