கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரரை வீழ்த்தி பிரான்ஸ் வீரர் வெற்றியடைந்துள்ளார்.
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரரும் பிரான்ஸ் வீரரும் மோதினர்.
விறுவிறுப்பாக ஆடிய இந்த போட்டியில் இந்திய வீரரான பிரியன்ஷூ ரஜாவத் 17-21,10-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதனால் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியர் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.