தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
மற்ற மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு இந்த வருடத்துடன் 5 ஆண்டு கால பதவிக்காலம் முடிவடையவுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், 9 மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலத்தை 2026-ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.