மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு செஸ் அசோசியேசன் மற்றும் ஏஆர்சி கல்லூரி இணைந்து நடத்திய செஸ் போட்டியில், 9, 11, 13, 15, 23 ஆகிய வயது பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஒவ்வொரு வயது பிரிவிலும் வெற்றி பெற்ற 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.