திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஸ்ரீ தேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கலச நீர் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.