2047-ல் அபிவிருத்தி அடைந்த இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவு நிறைவேற ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி திருமலை கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர், கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், நாடும் நாட்டு மக்களும் நலம், வளம் பெற வேண்டும் என்று சாமியிடம் வேண்டிக் கொண்டேன் என்றார்.
மேலும் 2047-ல் அபிவிருத்தி அடைந்த இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவு நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.