ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தில் உள்ள வெடிமருந்துக் கிடங்கில் ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான போர், 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.