இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தோ்வு நடத்த வேண்டும், முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீட் முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்கள் மீதான விசாரணை,
(NEXT)உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.