ஆண்டுக்கு 2 முறை செலுத்தும் தடுப்பூசிகளால் எச்.ஐ.வி பரவல் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்படுவது மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பரிக்கா மற்றும் உகாண்டாவில், 5 ஆயிரம் பெண்களை 3 குழுக்களாக பிரித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் ஒரு பிரிவினருக்கு Lenacapavir தடுப்பூசியும், மற்ற இரு பிரிவினருக்கு 2 விதமான மாத்திரைகளும் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவருக்கு கூட ஹெச்.ஐ.வி.தொற்று ஏற்படவில்லை.
அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த தடுப்பூசியை விற்பனைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.