இலங்கை திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரிசனம் செய்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ததாகவும், அனைவரின் நன்மைக்காக பிரார்த்தனை செய்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கோயில், அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது என ராமாயணம் கூறுவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், ராமர் தன்னுடைய பிரம்மஹஸ்தி தோஷத்தைப் போக்குவதற்காக, ராமேஸ்வரத்திற்குப் பிறகு இக்கோயிலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இக்கோயில் 16-ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களால் அழிக்கப்பட்ட போதிலும், சனாதன தர்மத்திற்கும், இந்து மதத்தின் ஆன்மாவிற்கும், இன்றளவும் சான்றாக உள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.