தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
மந்திதோப்பு கிராமத்தில் உள்ள இந்த மலைப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
மலைப்பகுதி என்பதால் வனத்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டதாகவும், ஆனால் வருவாய்துறையின் கீழ் உள்ள பகுதி எனக்கூறி வனத்துறையினர் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது.