கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 14 லட்ச ரூபாயை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு அதிலிருந்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த சேலம் சரக டி.ஐ.ஜி உமா கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.