நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கார் மோதி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கூனியூரை சேர்ந்த மூதாட்டி கோமதி, சேரன்மகாதேவி – அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையை கடக்க சாலையின் ஓரம் நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார், திடீரென கோமதி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார் ஓட்டி வந்த சரவணன் என்பரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கார் மோதி மூதாட்டி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.