நாகை அருகே திருக்கண்ணங்குடி மகா மாரியம்மன் கோயில் உண்டியல் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடியில் மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பூட்டை நள்ளிரவில் உடைத்த மர்மநபர்கள், உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, உண்டியலை வயலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.