சட்டம் ஒழுங்கை சீர்செய்ய தமிழக அரசு என்ன செயல்திட்டம் உருவாக்க போகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க அரசு என்ன திட்டம் உருவாக்க போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சரணடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து மட்டுமே கொலைக்கான காரணத்தை எவ்வாறு காவல்துறை முடிவு செய்தது எனவும் அவர் வினவியுள்ளார்.
தலித் தலைவரை மிக சுலபமாக கொல்லக்கூடிய சூழலை அரசு உருவாக்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் களைய அரசு என்ன செய்ய போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசுக்கு தலித் மீதும் தலித் தலைவர்கள் மீது உண்மையாகவே அக்கறை உள்ளதா? என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு தனது வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு எனவும் இயக்குநர் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.