பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் BE, B.TECH முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதற்கான கலந்தாய்வில் பங்கேற்க ஜூன் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சுமார் 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவரிசை பட்டியல் பொறியியல் கமிட்டியின், https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் நாளை வெளியாகிறது.