கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வட தொரசலூர் கிராமத்தில் எலிக்காய்ச்சல் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மூப்பனார் கோவில் தெருவைச் சேர்ந்த 5-ற்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எலிக்காய்ச்சல் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, வடதொரசலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது குறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.