விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியி,ல் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பத்திற்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை தொழிலாளர்கள் பட்டாசுக்கான மூலப்பொருட்களை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், மாரியப்பன், முத்து முருகன் என்ற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சரோஜா, சங்கரவேல் என்ற இரு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, M. புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.