தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மும்மடங்கு வேகத்தில் அரசு நிர்வாகம் செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மும்மடங்கு வேகத்தில் அரசு நிர்வாகம் செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடன் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
தாம் தனியாக வரவில்லை என்றும், தன்னுடன் இந்திய மண் வாசனையையும், 140 கோடி இந்தியர்களின் அன்பையும் எடுத்து வந்தததாக தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், முதன்முறையாக ரஷ்யாவில்தான் இந்தியா வம்சாவளியினருடன் உரையாடுவதாகவும், இன்றுடன் தான் பதவியேற்று சரியாக ஒருமாதம் நிறைவடைவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மும்மடங்கு வேகத்தில் தனது அரசு நிர்வாகம் செயல்படுவதாகவும் இந்தியா வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.