மாணவர் அமைப்பான ABVP-யின் நிறுவன நாளை ஒட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பழம்பெரும் மாணவர் அமைப்பாக தங்களை நிலைநிறுத்தியுள்ள ABVP எனும் தேசிய மாணவர் அமைப்புக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
76-வது நிறுவன நாள் கொண்டாடுகிற ABVP மாணவர் அமைப்பினர், சமுதாயத்தில் பல்வேறு தரப்பட்ட மாணவர்களிடையே மேற்கொண்டு வரும் நற்சிந்தனைகள் மிக்க செயல்களில் தொடர்ந்து ஈடுபடவும், நல்ல மாற்றங்களை விதைத்திடவும் அன்புடன் வாழ்த்துவதாக எல்.முருகன் கூறியுள்ளார்.