ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி பதிலளிக்கக் கோரி தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக விரைவாக பதிலளிக்க வேண்டும் எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.