இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி நடைபெற்ற பிரச்சாரம் நிறைவடைந்ததை அடுத்து, 138 வாக்கு சாவடி மையங்களில் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் களத்தில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் உள்ளனர்.இந்த தேர்தலில், 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 பேர் வாக்களிக்க உள்ளனர்.
மேலும், வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்கு சாவடிகளுக்கு மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள், பென்சில், பேனா மை, நூல், சீல் உள்ளிட்டவை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.