நாகை மீனவர்கள் 10 பேருக்கு வரும் 22 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை சிறையில் அடைத்தது.
காவல் நீட்டிப்பு நிறைவடைந்த நிலையில், 2-வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மீனவர்களுக்கு வரும் 22 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிப்பு செய்து இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து, மீனவர்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.