விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், புதுச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி குடித்தவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் புதுச்சேரி சாராயத்தை வாங்கி குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.