சென்னையில் சொத்துவரி செலுத்தாத 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை தியாகராயர் நகர், பாண்டி பஜார் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியில், குறிப்பிட்ட நாளுக்குள் சொத்து வரி செலுத்தாத உரிமையாளர்களிடம் கூடுதலாக 1 சதவீத தனி வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள வரி செலுத்தாத 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.