திருச்செந்தூர் அருகே சாலையைக் கடக்க முயன்ற ஆடுகள் மீது அரசு பேருந்து மோதியதில் 12 ஆடுகள் உயிரிழந்தன.
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கோயில்விளை அருகே சென்றபோது சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது அரசுப் பேருந்து மோதியது.
இதில் 12 ஆடுகள் உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்தனர்.