விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவாதியுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி காலமானார். இதனையடுத்து அங்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் களமிறங்கியுள்ள பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார்.
அதேபோல் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது குடும்பத்தினருடன் அன்னியூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42வது வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்தார்.