டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து டெல்லியில் சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.
அப்போது டெங்குவை ஒழிக்கும் வகையில், பல்வேறு துறைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயல்படுமாறு அதிகாரிகளை அமைச்சர் ஜெ.பி.நட்டா கேட்டுக்கொண்டார்.
மேலும், டெங்கு பாதிப்பு அதிகமுள்ள மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.