சென்னை பெரம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.
மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட தீ மளமளவென பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.
இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.