புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே புரவி எடுப்பு திருவிழாவை ஒட்டி ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
கண்ணுடையார், குருந்துடையார் அம்மன் கோயிலில் நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைதொடர்ந்து மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை காண ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர்.