கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்துக்கு முதல் பிரமாண்ட சரக்கு கப்பல் வந்துள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைந்துள்ளது. அரசு, தனியார் பங்களிப்புடன் கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்தத் துறைமுக கட்டுமானப் பணி தொடங்கியது.
விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் பிரமாண்ட சரக்குக் கப்பல்களைக் கையாளும் வகையில், அதானி நிறுவனத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த நிலையில், ஆயிரம் கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் திறன்வாய்ந்த சான் ஃபர்னான்டோ என்ற பிரமாண்ட சரக்குக் கப்பல் விழிஞ்சம் துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்டுள்ளது. விழிஞ்சம் துறைமுக வர்த்தக பயன்பாட்டின் ஒருபகுதியாக அதற்கான சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.