ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் தொடங்கியது.
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, பூடான், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட வங்கக் கடல் பிராந்தியத்தை சேர்ந்த ஏழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இதன் இரண்டு நாள் மாநாட்டுக்கு டெல்லியில் மத்திய அரசு ஏற்பாடு செய்தது. முதல் நாள் அமர்வில் பிம்ஸ்டெக் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்கக் கடல் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் புதிய வேகம், புதிய வளத்தை ஏற்படுத்த அனைவரும் உறுதியேற்க வேண்மென கேட்டுக்கொண்டார்.