மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபரான சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து தென்காசி வீராணம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன், திருச்சி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.