புதுக்கோட்டை மாவட்டம் வயோலோகம் கிராமத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வரும் 12 மாணவ மாணவிகளுக்கு கடந்த ஐந்து நாட்களில் அடுத்தடுத்த மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தர்கள் என்பதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் வயலோகம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் அமைத்து தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, சுகாதாரமற்ற குடிநீர் காரணமாகத்தான் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, வயோலோகம் கிராமத்திற்கு குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.