சென்னை அயனாவரத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர்.
பச்சைக்கல் வீராசாமி தெருவில், வீட்டு வசதி வாரியம் சார்பில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் குடியிருப்பின் 4வது தளத்தில் உள்ள வீட்டின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதனால் அதிச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும், வீடுகளை சீரமைத்து தரவேண்டுமெனவும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.